தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

by Editor / 26-09-2024 05:21:28pm
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்ட நிலையில், நாளை 27ஆம் தேதி காலை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசும் முதல்வர் சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும்  ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்திற்கான வரி நிலுவைகள், கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் முதல்வரின் இந்த பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவே சென்னை திரும்புகிறார்.

 

Tags : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Share via

More stories

Logo