இந்தியா பசிக்கொடுமை - அதிர வைக்கும் பட்டியல்

by Staff / 07-11-2022 12:23:17pm
இந்தியா பசிக்கொடுமை - அதிர வைக்கும் பட்டியல்

கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 116 நாடுகளில் இந்தியா 101-ஆவது இடம் என்ற மோசமான இடத்தைப் பெற்றது. முந்தைய 2020-ஆம் ஆண்டில், இப்பட்டியலில் 94-ஆவது இடத்திலேயே இந்தியா இருந்த நிலையில், அதைக் காட்டிலும் 2021-இல் மோசமான நிலைக்குப் போனது. குழந்தைகள் உரிய எடையில்லாமல் இருப்பது 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது 15.1 சதவிகிதமாக இருந்தது. இது 2022-இல் 19.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதேபோல ஊட்டச்சத்து பற்றாக்குறை, 2018-2020இல் 14.6 சதவிகிதமாக இருந்தது, 2019-2021இல் 16.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டுக்கான பசி குறியீடு பட்டியலின்படி, இந்தியா பசிக்கொடுமை பிரச்னையில் பாகிஸ்தானை விட பின் தங்கி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

Tags :

Share via