பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்" - திருமாவளவன்

by Staff / 07-11-2022 12:25:44pm
பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்

நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் மற்றும் அரசியல்வாதி என பல இறக்கைகள் கொண்ட மூத்த நடிகர் கமல்ஹாசன். இன்று அவர் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளையொட்டி திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், "பிறந்தநாள் காணும் மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு விசிக சார்பில் எமது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என விசிக தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via