மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தை திரும்ப பெற வாடிக்கையாளர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் .

by Editor / 08-04-2024 11:58:48pm
மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில்  இருந்து பணத்தை திரும்ப பெற வாடிக்கையாளர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் .

 

மயிலாப்பூர் மாட தெருவில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தை திரும்ப பெற வாடிக்கையாளர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பாஜக சார்பில் சிவகங்கை மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் நிறுவனம் சிக்கலில் மாட்டியுள்ளது.வைப்புத்தொகை மீதான வட்டிகள் தாமதமாகவும், முதிர்ச்சி அடைந்த முதலீடுகள் சிறுக சிறுக வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பீதியடைந்துள்ளனர்.இந்த நிதி நிறுவனத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைப்பு தொகை வைத்துள்ள நிலையில், மொத்தமாக 525 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஒரே நேரத்தில் அதிகமானோர் நிதி நிறுவனத்தில் பணத்தை திரும்ப கேட்டு வருவதால் சிக்கலான நிலை உருவாகியுள்ளது.

 

Tags : மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தை திரும்ப பெற வாடிக்கையாளர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் .

Share via