மூன்று பெண்கள் தீ குளிக்க முயற்சி பரபரப்பு

by Staff / 28-03-2023 03:50:33pm
மூன்று பெண்கள் தீ குளிக்க முயற்சி பரபரப்பு

தூத்துக்குடி காந்திநகர் இரண்டாவது தெரு பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிடர் நலத்துறை மூலம் தூய்மை பணியாளர்களுக்கு வசிக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இந்த இடத்தில் அவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.இந்நிலையில் வட்டி தொழில் செய்வது வரும் தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த சார்லின் என்பவர் தூய்மை பணியாளர்களை ஏமாற்றி போலி ஆவணங்கள் தயாரித்து தனது பெயருக்கு மாற்றி உள்ளார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது மேலும் இந்த இடம் மோசடியாக போலி அவனம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்யும் சார்லினை கண்டித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தன. மாவட்ட நிர்வாகம் இதை உடனடியாக தடுத்து நிறுத்தி தூய்மை பணியாளர்களுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தினர்.இந்நிலையில் இன்று சார்லின் நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி காவல்துறை உதவியுடன் தூய்மை பணியாளர்கள் 60 ஆண்டுகளாக வசித்து வந்த அந்த இடத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களது வீட்டில் இருந்த பொருட்களையும் வெளியே எடுத்து அப்புறப்படுத்தியுள்ளனர் இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த தூய்மை பணியாளர்கள் முனியம்மாள், ஜெயா, வீரலட்சுமி, ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது தற்போது தூய்மை பணியாளர்கள் இருக்க இடம் இல்லாமல் குடும்பத்துடன் தெருவில் வசிக்க வேண்டிய நிலை உள்ளதுஇதை தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற பெண்களையும் காவல்துறையினர் தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்..

 

Tags :

Share via