கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

by Staff / 28-03-2023 02:55:08pm
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் பெண்களை இழிவாக பேசிய நடத்துநரையும் ஓட்டுனரையும் தட்டிக்கேட்ட CPIM மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுத்தாய் உள்ளிட்ட பலர் மீது பொய்வழக்கு பதிவு செய்த சமயநல்லூர் எஸ். ஐ மீதும், ஓட்டுநர், நடத்துநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ். கே. பொன்னுத்தாய், எஸ். பாலா உள்ளிட்டு திரளாக பலர் பங்கேற்றனர்.

 

Tags :

Share via