ரூ.1,49,623 கோடி ஒதுக்கீடு செய்துள்ள 5ஜி அலைக்கற்றை ஏலம்,

by Editor / 29-07-2022 09:20:42am
ரூ.1,49,623 கோடி ஒதுக்கீடு செய்துள்ள 5ஜி அலைக்கற்றை ஏலம்,

அதிவேக இணைய சேவைக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த மூன்று நாட்களில் 16 முறை நடைபெற்றது. மூன்றாவது நாளில் ஏலத் தொகை ரூ.1,49,623 கோடியை எட்டியதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் அறிவித்தார்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் மிட்டலின் பார்தி ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் கௌதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் 4ஜியை விட பத்து மடங்கு வேகமான 5ஜி தொழில்நுட்பத்தை சொந்தமாக்குவதற்கான முயற்சியில் உள்ளன. கிழக்கு உத்தரபிரதேச வட்டத்தில் 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்கு ஜியோ மற்றும் ஏர்டெல் இடையே வியாழக்கிழமை கடுமையான ஏலம் நடைபெற்றது.

4.3 லட்சம் கோடி மதிப்பிலான 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது. ஜூலை 26ம் தேதி முதல் ஏலத்தில் ரூ.1.45 லட்சம் கோடி பெறப்பட்டது. இரண்டாவது நாளில் ரூ.1,49,454 கோடி. ஏலம் முடிந்தால்தான், எந்த நிறுவனம் எவ்வளவு அலைக்கற்றை வைத்திருக்கும் என்பது தெரியவரும்.இன்று வெள்ளிக்கிழமை நான்காவது நாளை எட்டுகிறது.
 
 

 

Tags : 5G spectrum auction with an allocation of Rs.1,49,623 crore,

Share via