எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 01-09-2023 04:24:53pm
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


பாட்னா, பெங்களூரு எதிர்க்கட்சிக் கூட்டத்தை தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நேற்றும் இன்றும் மும்பையில் நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நமது கூட்டணியின் பலத்தைவிட, 'INDIA' என்ற பெயரே பாஜகவுக்கு பயத்தையும், காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள், ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் என பாஜக நினைத்தது. ஆனால், கூட்டணியாக 3வது ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டிவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via