வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர்

by Admin / 01-04-2023 11:55:08pm
 வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர்

 கேரளா மாநிலம்  கோட்டையம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்திற்கு   கேரளா மாநிலம் சார்பாக வைக்கப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கு ஏற்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்றார். வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டு மலையாளத்தில் உரையை ஆரம்பித்து பின்னர் படிப்படியாக தமிழிலே தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார் . அத்துடன் வைக்கம் சத்தியாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவிற்கான இலட்சணையையும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார். வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில்அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் என்கிற நூலின் மலையாள மொழிபெயர்ப்பு புத்தகத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட கேரள முதலமைச்சர் பெனரை விஜயன் பெற்றுக் கொண்டார் .இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தமிழக முதல்வர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவரது துணைவியார் ஜானகி அம்மாள் உடைய சிலைகளுக்கு மரியாதை செலுத்தியதோடு கொச்சின் எர்ணாகுளம் சந்திப்பில் உள்ள உணவகத்தில் மக்களோடு மக்களாக இருந்து சிற்றுண்டி உண்டு அவர்களோடு கலந்துரையாடினார்

 

 வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர்
 

Tags :

Share via