உயிரை பறித்த இன்ஸ்டாகிராம் லிங்க்

by Staff / 03-04-2023 05:29:54pm
உயிரை பறித்த இன்ஸ்டாகிராம் லிங்க்

சென்னை அண்ணா நகரில் வறுமையில் வாடிய தாய்க்கு உதவ மகள் ஆன்லைன் டிரேடிங் செய்ய விரும்பி தொடர்ந்து அது குறித்த இணையதள பக்கங்களையும், லிங்க்குகளையும் இன்ஸ்டாகிராமில் தேடி வந்துள்ளார். அப்போது தான் இன்ஸ்டாவில் குடிகொண்டிருக்கும் மோசடி கும்பலின் இணையதள பக்கத்தில் மாணவி சிக்கியுள்ளார். இந்நிலையில், மாணவியிடம் தொடர்பு கொண்ட மோசடி கும்பல் அவரிடம் இருந்து 30,000 பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via