பிரதமர் மோடியை சந்திக்கும் தமிழக ஆளுநர்

by Editor / 09-07-2021 06:20:25pm
 பிரதமர் மோடியை சந்திக்கும் தமிழக ஆளுநர்

 


நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வரும் திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. 
இதேபோல், தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதில், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் திடீரென்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 3,211 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 10 ஆயிரத்து 59 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 33 ஆயிரத்து 665 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை நோய் தொற்றிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 43 ஆயிரத்து 541 ஆக உள்ளது.நேற்று ஒரு நாள் மட்டும் 57 பேர் நோய் தொற்று நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 33 ஆயிரத்து 253 பேர் நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 
இந்த நிலையில், தமிழகத்தில் அரசியல் சூழல், கொரோனா தொற்று பரவல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை செய்ய உள்ளார். தலைநகர் டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் சந்திக்க உள்ளார்

 

Tags :

Share via