தீ விபத்து. சாக்கு குடோன் எரிந்து சேதம்.

by Staff / 04-04-2023 02:13:01pm
தீ விபத்து. சாக்கு குடோன் எரிந்து சேதம்.

பெருந்துறையை அடுத்துள்ள பவானி ரோடு, கந்தாம்பாளையம்  பகுதியில்  அருணாச்சலம் என்பவரது மகன் மோகன் சிவகுமார் (50) சாக்கு குடோன் வைத்து நடத்தி வருகிறார்.   இவரது கடைக்கு அருகில் பழைய இரும்பு கடை ஒன்று உள்ளது.   சாக்கு குடோனுக்கு அருகில்  உள்ள காலி இடத்தில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது இந்த தீ அக்கம் பக்கத்தில்  மள மள வென்று பரவியது. இதில் இந்த சாக்கு குடோனின் முன் பகுதியில் வெளிப்புறம் போட்டு வைத்திருந்த சாக்குகளில் தீ பற்றி எரியத் தொடங்கியது. அப்பொழுது காற்று பலமாக வீசவே, இந்த தீ அருகில் உள்ள இரும்பு கடையில் குவித்து வைத்த பழைய வேஸ்ட் பொருட்களிலும் பற்றி எரிந்தது.   இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உடனடியாக, பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்று பலமாக வீசியதால் அக்கம் பக்கத்தில் பரவும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள், பின்னர், சாக்கு குடோன் மற்றும் பழைய இரும்பு வேஸ்ட் கடையில் ஏற்பட்ட தீயையும் அணைத்தனர். சம்பவ இடத்துக்கு பின்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாட்டு கொட்டகை பகுதியில், அமைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரிலும் தீ பற்றி எரிந்தது. அந்த இடத்துக்கு தீயணைப்பு வாகனம் செல்ல இயலாத நிலையில் அக்கம் பக்கத்தினரே, தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர்.   தீயின் வேகம் கட்டுக்கடங்காத நிலையில், சென்னிமலையில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. மேலும் இரண்டு தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அதன் மூலமும் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் ஏராளமான பொருட்கள் எரிந்து போனது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.   சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை போலீசார் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via