அதிகாலை 4 முதல் இரவு 8 மணிவரை கனிமம் கொண்டு செல்ல அனுமதி:தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்

by Editor / 08-04-2023 12:13:19am
அதிகாலை 4 முதல் இரவு 8 மணிவரை கனிமம் கொண்டு செல்ல அனுமதி:தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்

 கேரள மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துறை ரவிசந்திரன் இன்று மாலையில் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள சோதனைசாவடிகளில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு புளியரை போக்குவரத்துசோதனைச்சாவடியில் வைத்து சிறப்பு பேட்டி அளித்தார்:

அவர் தெரிவித்ததாவது:தமிழக கேரளா எல்லை புளியரை வழியாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரின்  அடிப்படையில் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கனிமவளத்துறை சார்பில் மூன்று உதவி இயக்குனர்கள், மற்றும் வருவாய் துறையில் ஒரு உதவி வட்டாட்சியர்,மற்றும்  உதவியாளர்கள் மேலும் காவல்துறை சார்பிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டால் வழக்கு பதிவும் செய்யப்பட்டு வருகிறது, இன்று மட்டும் இரண்டு யூனிட் ஓவராக சென்ற வாகனத்திற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் சோதனை நடப்பதால் சரியாக எடையோடு செல்வதாகவும் இதுவரை கனிம வளங்கள் கடத்தல் நடைபெறவில்லை என்றும்,முறையான அனுமதி பெற்றுத்தான் கொண்டு செல்லப்படுகிறது, தென்காசி மாவட்டம் புளியரை வழியாக விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதிகபட்சமாக 49 டன்  வரை கொண்டு செல்லலாம் என்றும் 16 டயர் லாரிகளில் 42 டன் வரை கொண்டு செல்லலாம் என்றும், இன்று நடைபெற்ற வாகன சோதனையில் அதிகபட்சமாக 39 டன் மட்டுமே கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஓவர் லோடு எதுவும் கொண்டுசெல்லப்படவில்லையென்றும்,மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்தார். மேலும் காலை நான்கு மணி முதல் கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஓவர் லோடு வாகனங்களுக்கு 30ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார், மேலும் தொடர்ச்சியாக வாகன சோதனைகள் நடைபெறும் என்றும் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருந்த அனுமதி நீடிக்கப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் காத்திருக்கும் நேரம் அதிகம் இருப்பதால் அதனை குறைக்கும் பொருட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு எட்டு மணி முதல் அதிகாலை 4 மணி வரை கனிமவளங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என்றும், ஏற்கனவே கடந்த 31 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல்இரவு  8 மணி வரை செல்லலாம் என்று உத்தரவு போடப்பட்டு அது முறையாக சென்றடையாததின் காரணமாக அனைத்து அலுவலகங்களுக்கும் முறையான தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இனி அதிகாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை கனிமங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அனுமதியளிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via