அந்தியோதயா ரயில் திருநெல்வேலி வரை இயக்கப்படும் நாட்கள் மாற்றம் 

by Editor / 16-03-2023 10:38:41pm
அந்தியோதயா ரயில் திருநெல்வேலி வரை இயக்கப்படும் நாட்கள் மாற்றம் 

திருவனந்தபுரம் கோட்டப் பகுதியில் மேலப்பாளையம் - நாங்குநேரி ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக மார்ச் 16 முதல் மார்ச் 22 வரை பகல் நேர ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன. தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த அறிவிப்பில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து மார்ச் 18 முதல் மார்ச் 23 வரை புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மற்றும் மார்ச் 19 முதல் மார்ச் 24 வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து வழக்கமான புறப்படும் நேரமான மாலை 05.05 மணிக்கு புறப்படும். மேலும் திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/ 22628) மார்ச் 19 முதல் மார்ச் 24 வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி ரயில் திருநெல்வேலி இருந்து வழக்கமான புறப்படும் நேரமான மதியம் 02.30 மணிக்கு புறப்படும்.  மார்ச் 22 அன்று தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் (22657) மற்றும் நாகர்கோவிலில் இருந்து மார்ச் 23 அன்று புறப்பட வேண்டிய தாம்பரம் வாரம் மும்முறை சேவை ரயில் (22658) ஆகியவை விருதுநகர் - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல மார்ச் 23 அன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாராந்திர சேவை விரைவு ரயில் (12667) மற்றும் மார்ச் 24 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரயில் (12668) ஆகியவை விருதுநகர் - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 

Tags :

Share via