ஒலிபெருக்கியால் அச்சத்தின் உச்சத்துக்கே போன பொதுமக்கள்.

by Editor / 29-10-2022 11:10:15pm
ஒலிபெருக்கியால் அச்சத்தின் உச்சத்துக்கே போன பொதுமக்கள்.

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பேட்டை சாலை  சுடுகாட்டுக்கு மேற்கு பகுதியில் தனியார் தோட்டத்தில் காட்டுப்பன்றி, யானைகள் மற்றும் வன விலங்குகள் விவசாய பயிர்களை சேதம் அடைய செய்யாமல் இருக்க பாதுகாப்புக்காக யானை மற்றும் வனவிலங்குகள் சத்தமிடுவது போல் ஒலிபெருக்கி வைத்ததால் யானை கூட்டம் ஊருக்கு அருகில் வந்துவிட்டது என பொதுமக்கள் நினைத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினார்கள் அங்கு சென்று பார்த்த பொழுது வன விலங்குகளை விரட்ட தனியார் தோட்ட  உரிமையாளர் இதுபோன்ற ஸ்பீக்கர் கட்டி யானை சத்தமிடுவதைப் போன்று வைத்துள்ளது தெரிய வந்தது இதுபோன்று வனத்துறை  அனுமதி இல்லாமல் செய்யக்கூடாது என தனியார் தோட்ட உரிமையாளர்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்

 

Tags :

Share via

More stories

Logo