நீலகிரியில் 10 புலிகள் இறப்பு: அரசு அறிக்கை தாக்கல்..

by Staff / 08-10-2023 01:39:44pm
நீலகிரியில் 10 புலிகள் இறப்பு: அரசு அறிக்கை தாக்கல்..

நீலகிரியில் 10 புலிகள் இறந்ததற்கு பட்டினி மற்றும் சண்டை தான் காரணம் என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் நான்கு குட்டிகள் உட்பட 10 புலிகள் இருந்தன.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கடிதத்தின் படி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் பெங்களூர் டாக்டர். ரமேஷ் விஞ்ஞானி, இந்திய வன விலங்கு நிறுவனம் மற்றம் வன விலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகத்தின் மண்டல துணை இயக்குநர் டாக்டர் கிபாசங்கர் மற்றும் சென்னையை சேர்ந்த வன விலங்கு ஆய்வாளர் டோக்கி ஆதில்லைய்யா ஆகியோர் கொண்ட குழு நீலகிரியில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 10 புலிகள் இறந்தது குறித்து விரிவான கள மதிப்பீட்டை மேற்கொண்டனர்.பொதுவாக வயது முதிர்ந்த பெண் புலிகள் ஒரு பிரசவத்தில் 2 அல்லது 3 குட்டிகளை ஈனும். சில சமயங்களில் 5 குட்டிகளை ஈனும். அதில், 50 சதவீதம் குட்டிகள் நோய், பட்டினி மற்றும் சிசுக்கொலை போன்ற பல காரணிகளால் இறக்கும். சீகூர் வனப்பகுதியில் 2 வார குட்டிகள் இறப்பதற்கு ஒன்று குட்டிகள் உடல் நலம் குன்றியிருக்கும். மேலும், இளைய வயதில் குட்டிகள் பிரசவிக்கும் போது, இது போன்று இறப்புகள் நேரிடும். சின்னக்குன்னூர் பகுதியில் உயிரிழந்த நான்கு குட்டிகள் இரண்டு மாதங்களே ஆனவை. இந்த குட்டிகளுக்கு உணவைத் தேடி வெகு தூரம் தாய் சென்ற போது, கவனிக்கப்படாமல் பட்டினியால் இறந்திருக்க வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via