இன்றைய ராசி பலன்கள் -(10-04-2023)

by Admin / 10-04-2023 12:19:12am
இன்றைய ராசி பலன்கள் -(10-04-2023)

மேஷம்

ஏப்ரல் 10, 2023

 

 

உடல் நிலையில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வாகன பயணங்களில் கவனம் வேண்டும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 7

 

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் 

 

 

 

அஸ்வினி : சோர்வு உண்டாகும். 

 

பரணி : பிரச்சனைகள் நீங்கும்.

 

கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும். 

---------------------------------------

 

 

ரிஷபம்

ஏப்ரல் 10, 2023

 

 

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தாயாரின் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். ஆதாயம் நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

 

 

கிருத்திகை : அனுகூலமான நாள்.

 

ரோகிணி : ஆதரவு கிடைக்கும். 

 

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும். 

---------------------------------------

 

 

மிதுனம்

ஏப்ரல் 10, 2023

 

 

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பணிகளில் அனுபவமிக்க வேலையாட்களை நியமிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். செய்கின்ற செயல்களில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். போட்டி நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

 

 

 

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

 

திருவாதிரை : உற்சாகம் ஏற்படும். 

 

புனர்பூசம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------

 

 

கடகம்

ஏப்ரல் 10, 2023

 

 

வேலை செய்யும் இடத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்களை சுற்றி இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். கீர்த்தி நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

 

 

புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும். 

 

பூசம் : ஆதாயம் உண்டாகும். 

 

ஆயில்யம் : ஒப்பந்தம் சாதகமாகும்.

---------------------------------------

 

 

சிம்மம்

ஏப்ரல் 10, 2023

 

 

மாணவர்களுக்கு படிப்பில் கவனம் வேண்டும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபார ரீதியான பயணங்கள் கைகூடும். புதிய நபர்களின் உதவியால் மாற்றமான சூழல் அமையும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் 

 

 

 

மகம் : விவாதங்கள் மறையும்.

 

பூரம் : பயணங்கள் கைகூடும். 

 

உத்திரம் : கவனம் வேண்டும்.

---------------------------------------

 

 

கன்னி

ஏப்ரல் 10, 2023

 

 

உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில்நுட்ப கருவிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். இசை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாமதம் விலகும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

 

 

உத்திரம் : துரிதம் உண்டாகும். 

 

அஸ்தம் : ஆதாயம் ஏற்படும். 

 

சித்திரை : சிறப்பான நாள்.

---------------------------------------

 

 

துலாம்

ஏப்ரல் 10, 2023

 

 

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். பழைய நினைவுகளால் மனதில் அமைதியின்மை ஏற்படும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். முயற்சிகள் மேம்படும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 7

 

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

 

 

சித்திரை : பொறுப்புகள் மேம்படும். 

 

சுவாதி : ஆர்வம் உண்டாகும்.

 

விசாகம் : சாதகமான நாள். 

---------------------------------------

 

 

விருச்சிகம்

ஏப்ரல் 10, 2023

 

 

மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். உடல் தோற்றப்பொலிவை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. நினைவாற்றலில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். அனுகூலமான நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 

 

 

 

விசாகம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

 

அனுஷம் : கவனத்துடன் செயல்படவும்.

 

கேட்டை : மாற்றமான நாள்.

---------------------------------------

 

 

தனுசு

ஏப்ரல் 10, 2023

 

 

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பீர்கள். சுற்றி இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வாழ்க்கையை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார போட்டிகளில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

 

 

 

மூலம் : புரிதல் உண்டாகும். 

 

பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும். 

 

உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------

 

 

மகரம்

ஏப்ரல் 10, 2023

 

 

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

 

 

உத்திராடம் : வரவுகள் கிடைக்கும். 

 

திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.

 

அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------

 

 

கும்பம்

ஏப்ரல் 10, 2023

 

 

எதிர்காலம் கருதி சில பணிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உயர்கல்வி ரீதியான பயணங்கள் கைகூடும். ஆசைகள் உண்டாகும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

 

 

 

அவிட்டம் : மாற்றமான நாள்.

 

சதயம் : தெளிவு பிறக்கும்.

 

பூரட்டாதி : பயணங்கள் கைகூடும். 

---------------------------------------

 

 

மீனம்

ஏப்ரல் 10, 2023

 

 

இறை வழிபாட்டிற்காக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபார அபிவிருத்தி உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நேர்மறை சிந்தனைகளுடன் எதிலும் செயல்படுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

 

 

பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும். 

 

உத்திரட்டாதி : நெருக்கம் உண்டாகும். 

 

ரேவதி :  நட்பு கிடைக்கும். 

 

Tags :

Share via