மதுரை மீனாட்சி அம்மன்- சொக்கநாதர் திருக்கல்யாணம்

by Admin / 02-05-2023 10:48:53am
 மதுரை மீனாட்சி அம்மன்- சொக்கநாதர் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோலாலமாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் நிகழ்த்தப் பெறும் இந்த திருக்கல்யாண நிகழ்வை சுற்று வட்டாரங்களில் இருந்துஆயிரக்கணக்கான மக்கள் திருக்கல்யாணத்தை பார்ப்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்துள்ளனா்..இன்று காலை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் இடையிலான திருமண வைபவம் சிவாச்சாரியார்கள் திருக்கல்யாண வைபவ த் திருக்கென்று  இருக்கிற சம்பிரதாய நடைமுறைப்படி சுந்தரேஸ்வரர் ஆகவும் மீனாட்சியம்மையாகவும் இருக்கின்ற இருவரும் தலையில் அதற்கான தொப்பியை அணிந்து கொண்டு மாறி மாறி மாலை இட்டுக்கொண்ட நிகழ்வும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண் முன்னே நிகழ்ந்தது.  திருக்கல்யாண விழாவிற்கு வந்துள்ள பக்தா்களுக்கு  பசியாறி செல்ல வேண்டும் நேற்று இரவில் இருந்து இன்று வரை மூன்று வேளைகளும் உணவுகள் சமைக்கப்பட்டு வருகின்றது. தன்னார்வ தொண்டர்கள், சமையல்காரர்கள், காய்கறி வெட்டக்கூடிய ஆண் பெண் என நூற்றுக்கணக்கானோா் சமையலுக்கு உதவி  வருகிறாா்கள்.. மதுரை மாவட்ட நிர்வாகமும் காவல்துறை மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் பக்தர்களின் பாதுகாப்பு சுகாதாரம் குடிநீர் வசதி போன்றவற்றையெல்லாம் கண்காணித்து வருகிறார்கள்.

 மதுரை மீனாட்சி அம்மன்- சொக்கநாதர் திருக்கல்யாணத்தை காண்பதற்காக பக்தர்களுக்கு ரூபாய் 500 ரூபாய் 200 ஆகிய கட்டணங்களில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட்டை பெற்றிருப்பவர்கள் மட்டும்தான் திருக்கல்யாணம் கண்டு ரசிக்க முடியும் என்கிற நிலையில், டிக்கெட் வாங்கிய அனைவரும் திருக்கல்யாணத்தை கண்குளிர கண்டு ரசித்தார்கள். திருக்கல்யாணத்தை தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

 

 

Tags :

Share via