அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு முகக்கவசம் அணிந்து பங்கேற்பு

by Staff / 13-04-2023 11:44:46am
அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு முகக்கவசம் அணிந்து பங்கேற்பு

சட்டப்பேரவை நிகழ்வில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர். கொரோனா தொற்றை தடுப்பதில் அரசு அலட்சியமாக இருப்பதாகவும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், இவற்றை கண்டித்து கருப்பு முகக்கவசம் அணிந்து வந்துள்ளதாக அக்கட்சி எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர். நாடு முழுவதும் நாள்தோறும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த தினம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முகக் கவசம் கட்டாயமாக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

 

Tags :

Share via