நாகர்கோவிலில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு.

by Staff / 13-04-2023 02:15:28pm
நாகர்கோவிலில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு.

குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி செந்தில் குமார் தலைமை யில், மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கர நாராயணன் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரவி (குளச்சல் வட்டாரம்), பிரவீன் ரெகு ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இவர்கள் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், பீச்ரோடு சந்திப்பு, பட்டகசாலியன்விளை, மறவன் குடியிருப்பு, கேப்ரோடு ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அனைத்து பகுதிகளிலும் உள்ள வடை, பஜ்ஜி பலகார கடைகளில் பயன்ப டுத்தப்படும் சமையல் எண்ணெய், திரும்ப திரும்ப பயன்படுத்தப்படுகிறதா? என போலார் மீட்டர் என்ற கருவி மூலம் ஆய்வு மேற்கொண்டு தரமற்ற எண்ணெய் கொட்டி அழிக்கப்பட்டது. பலகார கடைகளில் பயன்படுத்தப் படும் சமையல் எண்ணெய், மீதப்படும் எண்ணெய்யை யும் 25 சதவீத டோட்டல் போலார் காம்பவுண்டு (டி. பி. சி. ) என்ற அளவீடுக்கு அதிகம் உள்ளதா? என பலகார கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நேற்று மொத்தம் 37 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயன்படுத்த தகுதியற்ற 20 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய் யப்பட்டு கொட்டி அழிக்கப் பட்டது. மேலும், அழுகிய, கெட்டுப் போன பழ வகைகள் 16 கிலோ, 1. 3 கிலோ டீ தூள், திறந்த நிலையில், தூசி படும்படியாக வைக்கப்பட்டு இருந்த சுகாதாரமற்ற வடை, பஜ்ஜி, சமோசா ஆகியவை 10 கிலோ, வண்ணம் சேர்க்கப் பட்ட மாட்டு இறைச்சி சுமார் 5 கிலோ கொட்டி அழிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 4 கடை களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
 

 

Tags :

Share via