இன்று அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

by Editor / 16-04-2023 08:53:53am
இன்று அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் வரும் 24ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்டமான மாநாடு நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அதனை எதிகொள்வது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்

Share via