குரோம்பேட்டையில் ரூ. 100 கோடியில் தலைமை மருத்துவமனை

by Staff / 18-04-2023 12:37:43pm
குரோம்பேட்டையில் ரூ. 100 கோடியில் தலைமை மருத்துவமனை

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பல்லாவரம் தொகுதி உறுப்பினர் இ. கருணாநிதி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். அங்குள்ள பழைய கட்டிடங்களுக்கு பதில் புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: மக்கள் கோரிக்கை ஏற்று மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தும் வகையில், 400 படுக்கைகளுடன், 2. 27 லட்சம் சதுரடியில், தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ. 100 கோடியில் கட்டிடம் கட்டும் பணியை கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் தொடங்கி வைத்தார்.இப்பணிகள் முடிந்ததும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக இயங்கும். புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன.ஏற்கெனவே உள்ள பழைய மருத்துவமனையில், தற்போது கூடுதல் வசதிக்காக ரூ. 6. 89 கோடி நிதியில் தாய்சேய் நல கட்டிடம், ரூ. 1. 25 கோடியில் ஆய்வக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர பல்லாவரத்தில், 10 மருத்துவ கட்டிடங்கள் ரூ. 11. 12 கோடியில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via