இன்று விண்ணில் பாய்கிறது.பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் .

by Editor / 22-04-2023 08:03:03am
இன்று விண்ணில் பாய்கிறது.பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் .

சிங்கப்பூரின் இரண்டு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம், இந்த செயற்கைகோளை ஏவ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி 741 கிலோ எடையுள்ள டெலியோஸ்-02 செயற்கைக்கோளும், லும் லைட்-4 என்ற 16 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோளும் இன்று பிற்பகல் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகின்றன. இயற்கை பேரிடர் உள்ளிட்டவைகள் குறித்த தகவல்களை டெலியோஸ் செயற்கைகோள் மூலம் பெற முடியும்.

 

Tags :

Share via