பயங்கரவாத தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி

by Staff / 05-05-2023 03:36:05pm
பயங்கரவாத தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ராணுவ அதிகாரி உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் ரஜோரி செக்டாரின் கண்டி வனப்பகுதியில் ராணுவக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்த ராணுவ வீரர்களை ஹெலிகாப்டர் மூலம் உதம்பூர் கட்டளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via