மதுரை-மும்பை விமானம் 5 மணிநேர தாமதம்., இதய நோய் பாதிக்கப்பட்ட சிறுமிதவிப்பு.

by Editor / 22-04-2023 05:42:30pm
மதுரை-மும்பை விமானம் 5 மணிநேர  தாமதம்., இதய நோய் பாதிக்கப்பட்ட சிறுமிதவிப்பு.

மதுரை விமான நிலையத்திற்கு இன்று மதியம் 12.10 செல்ல இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் மும்பையில் இருந்து காலை 11:45 மணிக்கு மதுரை வந்து மதுரையிலிருந்து 170 பயனிகளுடன் 12.10 மணிக்கு மும்பை செல்ல இருந்தது. ஸ்பை ஜெட் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதுவரை சுமார் 5 மணி நேரம் ஆகியும். இதுவரை மதுரை விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல முடியாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,அந்த விமானத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மும்பை செல்ல இருந்தார். அவர் உள்ளிட்ட 170 பயணிகளும் மதுரை விமான நிலையத்தில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via