முப்பெரும் புரட்சி விழாவை ஓபிஎஸ் அணியினர் திருச்சியில் மிகப் பிரம்மாண்ட முறையில் நடத்தினர்.

by Admin / 25-04-2023 02:11:29am
 முப்பெரும் புரட்சி விழாவை ஓபிஎஸ் அணியினர் திருச்சியில் மிகப் பிரம்மாண்ட முறையில் நடத்தினர்.

திருச்சியில் அதிமுகவின் நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம் ஜி ராமச்சந்திரன்  பிறந்த நாள் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாள் - அதிமுக தோற்றமாகி 50 ஆண்டுகள் கடந்த விழா என முப்பெரும் புரட்சி விழாவை ஓபிஎஸ் அணியினர் திருச்சியில் மிகப் பிரம்மாண்ட முறையில் நடத்தினர். இவ்விழா சாதாரணமாக நடந்து முடிந்து விடும் என்று  நினைத்திருந்த  நிலையில்  லட்சக்கணக்கான தொண்டர்களுடன்   ஓபிஎஸ் மிகுந்த மகிழ்ச்சியோடுபங்கேற்றாா்... இந்த விழாவில் மிக அழுத்தமாக மிக வலிமையான குரலோடு அவர் பேசினார் .கட்சி தோற்றத்திலிருந்து கட்சியை ஒரு சாதாரண தொண்டன் கூட வழிநடத்த முடியும் என்கிற விதியை உருவாக்கிய எம்ஜிஆர் அவர் வழிவந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா அப்படிப்பட்ட அவர்கள்  இயக்கிய உருவாக்கிய இயக்கத்தை இன்றைக்கு அபகரிக்கிற நோக்கோடு எடப்பாடி பழனிச்சாமி 10 மாவட்டச் செயலாளர் முன்மொழிய பத்து மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய - ஐந்து ஆண்டுகள் தலைமை பதவியில் இருந்தால் மட்டும்தான் பொதுச் செயலாளராக வர முடியும் என்கிற ஒரு புதிய விதியை உருவாக்கி கட்சியை ஆரம்பித்த புரட்சித்தலைவருக்கு துரோகம் இழைத்து விட்டார் என்றும் எம்ஜிஆரின்  தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து தன்னை எம்ஜிஆர் போல் பாவித்துக்கொண்ட எடப்பாடி என்றும் பல இடங்களில் எடப்பாடி பழனிச்சாமியை நீ- அவன்- இவன் என்றும்  இத்தனை காலஅடக்கிவைத்திருந்த கோபத்தை ஆக்ரோசத்தை ஓ .பன்னீர்செல்வம் மேடையில் வெளிப்படுத்தினார். இந்த கூட்டம் அதிமுக    வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்பதை தெளிவுபடுத்தியதாக தான் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பணத்தை வைத்துக்கொண்டு செயற்குழு உறுப்பினர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் விலைக்கு வாங்கிவிட்டார். ஆனால். அடிமட்டத்தில் இருக்கின்ற ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் .அவர்கள்தான் இந்த கழகத்தினுடைய ஆணிவேர் இந்த கழகத்தினுடைய விழுதாக ஊன்றி கழகத்தை தாங்கி கொண்டு இருக்கிறார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் சுட்டிக் காட்டினார். புரட்சித்தலைவி 2011 ஆம் ஆண்டில் கோவையிலும்  திருச்சியிலும் மாநாடு நடத்தினார் என்றும் அந்த மாநாட்டில் திருச்சி மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. திருச்சி மாநாட்டில் இருந்து தான் பத்தாண்டு கால ஆட்சியை ஆதிமுக பெற்றது .அதனால் இந்த திருச்சி திடல்  மீண்டும் அதிமுகவை அாியாணையில் ல் ஏற்றும் என்கிற விதமாகவும் பேசினார்.

 

 முப்பெரும் புரட்சி விழாவை ஓபிஎஸ் அணியினர் திருச்சியில் மிகப் பிரம்மாண்ட முறையில் நடத்தினர்.
 

Tags :

Share via