டெல்லி செல்ல இருந்த விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.பயணத்தை ரத்து செய்தார் முதல்வர்..காரணம் என்ன..?

by Editor / 27-04-2023 10:47:00pm
 டெல்லி செல்ல இருந்த விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.பயணத்தை ரத்து செய்தார் முதல்வர்..காரணம் என்ன..?

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மூவை சந்திக்க இருப்பதால், இன்று இரவு 8:30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லி செல்வதாக இருந்தது. அதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு 8 10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்து, அங்குள்ள வி பி ஐ பி லஞ்சில் அமர்ந்திருந்தார்.

இதற்கிடையே விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னதாக, விமானி விமானத்தின் இயந்திரங்களை சரி பார்த்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரிய வந்தது. இதனால் விமானத்தில் பயணிகளை ஏற்றாமல், விமான பொறியாளர்கள் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் இன் உதவியாளர்கள், ஏர் இந்தியா நிர்வாகத்திடம் விமானம் செல்வது தாமதமானால், வேறு விமானத்திற்கு டிக்கெட்டை மாற்றலாமா என்று கேட்டனர். அதற்கு ஏர் இந்தியா நிர்வாகம், சிறிய பிரச்சனை தான் சரி செய்து விடுவோம் சிறிது தாமதமாக விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்திருக்கின்றனர்.


இதற்கிடையே ஏர் இந்தியா நிர்வாகம் தற்போது இந்த விமானம் இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர்.

இதனால் இந்த விமானத்தில் பயணிக்க வேண்டிய முதலமைச்சர் மட்டும் இன்றி, மேலும் பயணிகள் 154 பேர் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இதற்கிடையே முதலமைச்சர் ஸ்டாலின் இரவு 9:15 மணி அளவில், சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். நாளை காலை 6 மணிக்கு ஏர் இந்தியா, அல்லது 6:55 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் முதலமைச்சர் டெல்லி செல்வார் என்று கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் பயணிக்க இருந்த மற்ற பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு, ஏர் இந்தியா விமான நிறுவன கவுண்டரில் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கின்றனர்.

 

Tags :

Share via