சுனாமி 18 வது ஆண்டு நினைவுமலர் தூவி கடலில் பால் ஊற்றி அஞ்சலி.

by Editor / 26-12-2022 08:39:33am
 சுனாமி 18 வது ஆண்டு நினைவுமலர் தூவி கடலில் பால் ஊற்றி அஞ்சலி.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி என்ற ஆழிப்பேரலையானது இந்தியா, இந்தோனேசியா உள்பட 14 நாடுகளில் கடற்கரையோரம் வசித்தவர்களை வாரி சுருட்டியது. இதில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் பலியானார்கள். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போனார்கள்.

தூத்துக்குடி சுனாமி 18 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திரேஸ்புரம்  கடற்கரையில் மீனவர்கள் மௌன அஞ்சலி மலர் தூவி கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

 இதில் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதோடு ஏராளமானவர்கள் உயிரிழந்தனர் அது ஆறாத வடுவாக மாறி உள்ளது.கடலோரக்கிராமங்களில் மீனவர்கள் மௌன அஞ்சலி செலுத்தி மலர் தூவி கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

 

Tags :

Share via