குற்றால அருவியில் திடீர் வெள்ளபெருக்கு..

by Editor / 26-12-2022 08:43:08am
குற்றால அருவியில் திடீர் வெள்ளபெருக்கு..

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை இல்லாத நிலை நீடித்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை குற்றாலம் பகுதிகளில் பெய்தது நிலையில் இதன் தொடர்ச்சியாக இங்குள்ள அருவிகளிலும் நீர்வரத்து சுமாராகவே இருந்து வந்தது இந்த நிலையில் காலையில் திடீரென மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம் வனப்பகுதியில் கன மழை பெய்தது கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி பழைய குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது இதன் தொடர்ச்சியாக குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தண்ணீர் கூட்ட தொடங்கியதால் அங்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அவர்களை அப்புறப்படுத்தினார். தொடர்ந்து பழைய குற்றாலம் அருவியிலும் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கூட்டப்படுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.குற்றாலம் மெயினருவியில் குளிக்க வந்த ஐயப்பா பக்தர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றவண்ணம் இருந்தனர்.

 

Tags :

Share via