மகா சிவராத்திரியை முன்னிட்டு காலஹஸ்தியில் குவிந்த பக்தர்கள்.

by Editor / 01-03-2022 11:46:52pm
மகா சிவராத்திரியை முன்னிட்டு காலஹஸ்தியில் குவிந்த பக்தர்கள்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் காளஹஸ்தி கோயிலில் இன்று மகா சிவராத்திரி தினமான  உபவாசம் மேற்கொள்வது, சிவலிங்க வழிபாடு செய்வது, இரவு முழுவதும் சிவ நாம ஜெபம் செய்து விழித்திருப்பது ஆகியவை பிறவி பேரிலிருந்து ஒரு மனிதனுக்கு விடுதலை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

 எனவே இன்று பக்தர்கள் உபவாசம் மேற்கொண்டு கோவிலுக்கு சென்று சிவலிங்க வழிபாடு செய்து  இரவு முழுவதும் விழித்திருந்து சிவ நாம ஜெபம் செய்வது வழக்கம்.

மிகவும் தொன்மையான சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி தினம் என்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக மறுபிறவி ஏற்படாது என்பது பக்தர்களின் அசைக்க இயலாத நம்பிக்கை.


 எனவே மிகவும் தொன்மையான சிவன் கோவிலான காளஹஸ்தியில் இருக்கும் வாயு லிங்கேஸ்வரர் கோவிலுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி வழிபாடு நடத்தினர்.


இதன்காரணமாக காளஹஸ்தி கோவில் வளாகம் முழுவதும் மனித தலைகளாகவே காணப்பட்டன.

 அதிக அளவில் பக்தர்கள் வருகை காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி வழிபாடு நடத்தினர்.

 பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் குடிநீர்,உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

 தற்போது காளகஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இரவு நந்தி வாகன சேவை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

 

மகா சிவராத்திரியை முன்னிட்டு காலஹஸ்தியில் குவிந்த பக்தர்கள்.
 

Tags :

Share via