அக்னி நட்சத்திரம் துவங்கும் நாளில்  வெளுக்கப்போகுது மழை.

by Editor / 04-05-2023 08:39:17am
அக்னி நட்சத்திரம் துவங்கும் நாளில்  வெளுக்கப்போகுது மழை.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும் வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.இன்று அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளது.அக்னி நட்சத்திரம் துவங்கும் நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய வெளுக்கப்போகுது. 

அக்னி நட்சத்திரம் துவங்கும் நாளில்  வெளுக்கப்போகுது மழை.
 

Tags :

Share via