நள்ளிரவில் மரத்தில் ஏறி பலாப்பழம் பறித்த யானை .

by Editor / 04-05-2023 08:20:11am
நள்ளிரவில் மரத்தில் ஏறி பலாப்பழம் பறித்த யானை .

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கேரள மாநிலத்தில் இருந்து தற்போது இறைக்காக ஏராளமான வனவிலங்குகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் விளைநிலங்களுக்குள் காட்டு விலங்குகள் வருவதைத் தொடர்ந்து இந்த பகுதி விவசாயிகள் பட்டாசு வெடித்து வனவிலங்குகளை விரட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கேரள மாநில எல்லை பகுதியான ஆரியங்காவு அம்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று உலா வந்த வண்ணம் உள்ளன. தேயிலைத் தோட்ட பகுதிகளில் உலா வருவதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் தற்பொழுது அந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக உணவு தேடி ஒற்றை யானை ஒன்று அதிகாலைப் பொழுதிலும், இரவு நேரங்களில் அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்களை பறித்து திங்கும் சூழலிலும் உலா வருகின்றது. இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அந்த ஒற்றை யானை அம்புநாடு பகுதியில் உள்ள விவசாய நிலப் பகுதியில் உள்ள குட்டையில் உற்சாகமாக குளித்து வரும் காட்சிகளையும் அந்தப் பகுதியில் சென்ற பொது மக்கள் தங்களது அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து உள்ளனர், தற்பொழுது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக உலா வருகின்றன. கோடை வெயிலின் வெப்பம் தாங்காமல் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் தமிழக கேரள  எல்லை பகுதியான பாலருவி,அம்பநாடு  எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணியில் அங்குள்ள அருவிகளுக்கு மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒற்றை யானையால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாகவும் மிகவும் கவனத்தோடு பொதுமக்கள் வனப்பாகுதிகளிலுள்ள அருவிகளுக்கு செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

நள்ளிரவில் மரத்தில் ஏறி பலாப்பழம் பறித்த யானை .
 

Tags :

Share via