10 லட்சம் மோசடி வளசரவாக்கம் கவுன்சிலர் மீது புகார்

by Staff / 07-05-2023 01:33:42pm
10 லட்சம் மோசடி வளசரவாக்கம் கவுன்சிலர் மீது புகார்

வளசரவாக்கம், திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் தனசேகரன், 69. இவர், கோயம்பேடு காய்கறி சந்தையில் கூலி வேலை செய்து வந்தார். வயது முதிர்வு காரணமாக வீட்டில் உள்ளார். இவர், 2018ம் ஆண்டு, தனக்கு சொந்தமான பூர்வீக சொத்தை விற்று, பெரும் தொகையை கையில் வைத்திருந்தார். அப்போது, அவருக்கு பழக்கமான பாரதி என்பவர், வளசரவாக்கம் ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்த தன் தோழி வனிதாவிற்கு, வீட்டுமனை வாங்க தனசேகரனிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி கொடுத்துள்ளார். பாரதி தற்போது, வளசரவாக்கம் மண்டலம் 152வது வார்டு கவுன்சிலராக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு ஆண்டுகளாக வட்டியோ, அசலோ தரவில்லை. இதனால், மன உளைச்சலடைந்த தனசேகரன், கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து, வளசரவாக்கம் போலீசார் இருதரப்பினரிடம் விசாரித்தனர். அப்போது, மூன்று மாதங்களில் வட்டியுடன், 20 லட்சம் ரூபாய் அளிப்பதாக பாரதி மற்றும் வனிதா ஆகியோர் எழுதிக் கொடுத்தனர். ஆனால், ஐந்து மாதங்களாகியும் வரை பணம் கொடுக்கவில்லை எனக் கூறி தனசேகரன் மீண்டும், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

 

Tags :

Share via