மதுரை எம்.பி., கேள்விக்கு நிதியமைச்சர் பதில்

by Staff / 09-02-2024 01:14:22pm
மதுரை எம்.பி., கேள்விக்கு நிதியமைச்சர் பதில்

நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் சட்ட விதி மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது நிதியமைச்சரின் பதிலிலிருந்து உறுதியாகியுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ரூ.100 கோடி செலுத்தப்பட்ட மூலதனம் அல்லது ₹300 கோடி குறைந்தபட்ச விற்பனை உள்ள நிறுவனங்கள் தங்களின் அவையில் ஒரு பெண் இயக்குநரையாவது கொண்டிருக்க வேண்டும் என்ற சட்ட நடைமுறை எந்த அளவிற்கு நடைமுறையில் உள்ளது என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2016-2024 காலத்தில் 81 நிறுவனங்கள் மீது தண்டத் தொகையாக ₹1.41 கோடி விதிக்கப்பட்டுள்ளது. 2018லிருந்து 'செபி' அமைப்பு விதிகளின்படி டெல்லி, மும்பை பங்குச் சந்தைகள் விதித்துள்ள தண்டத்தொகை விவரங்களைச் சேர்த்தால், 2019 - 2024 காலத்தில் 432 நிறுவனங்கள் மீது ₹25 கோடி தண்டம் வசூலிக்கப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளார்.

 

Tags :

Share via