ரூ. 16 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ள அண்ணா பல்கலை..!?

by Admin / 05-10-2021 10:46:10pm
ரூ. 16 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ள அண்ணா பல்கலை..!?

 

ஜி.எஸ்.டி.பதிவு எண் பெறாமல், நான்கு ஆண்டுகளாக வரி செலுத்தாமல், அண்ணா பல்கலை 16 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.  

அண்ணா பல்கலையில் தேர்வு மையம், உறுப்பு கல்லுாரி சேவை மையம், ஆராய்ச்சி மையம் என 40-க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகின்றன. இந்த பல்கலையின் கீழ், ஏராளமான இன்ஜினியரிங் உறுப்பு கல்லுாரிகளும் இயங்குகின்றன.

உறுப்பு கல்லுாரிகளுக்கு, பல்கலை வழங்கும் சேவைக்கு 18 சதவீதம்ஜி.எஸ்.டி.,வரியை, சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் செலுத்த வேண்டும். கல்லுாரிகளிடமிருந்து பெறும் வரியை, அரசுக்கு அண்ணா பல்கலை செலுத்த வேண்டும்.

ஆனால், அண்ணா பல்கலை, பொது ஜி.எஸ்.டி.,பதிவு எண் என இதுவரை ஏதும் பெறாமல், நோட்டுகளில் கணக்கு விபரங்களை பராமரித்து வருகிறது. இதன்படி, கல்லுாரிகளிடம் வசூலித்த 100 கோடி ரூபாய்க்கு 16 கோடி ரூபாய் வரை, ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும்.

ஆனால், இதுவரை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
 
இந்த வரி ஏய்ப்பு தொடர்பாக, ஜி.எஸ்.டி, அதிகாரிகள ஆய்வு செய்து சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணா பல்லையில் ஜி.எஸ்.டி., ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

என்றும் ஜிஎஸ்டி ஆய்வு அதிகாரிகள் தெரவித்துள்ளனர். கல்லுாரிகளுக்கு, பல்கலை வழங்கும் சேவைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. அதை அனைத்து பல்கலைகழகங்களும் , கல்லுாரிகளும் செலுத்த வேண்டும்.

செலுத்த தவறினால், வரி ஏய்ப்புக்கு நிகரான அபராதம் விதிக்கப்படும்.என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்

 

Tags :

Share via