சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு:

by Editor / 15-07-2021 09:55:14am
சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு:

 வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்தார்.இந்தியா எல்லையில் பல்வேறு பகுதிகளில் சீன ராணுவம் பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை குவித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு கிழக்கு எல்லையில் உள்ள பல்வேறு முகாம்களுக்கு கூடுதலாக 50 ஆயிரம் வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய முகாம்களுக்குச் சென்று அங்குள்ள கால நிலவரத்தை நேரடியாக கண்டறிந்துள்ளார்.

இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் இந்திய மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துக் கொண்டது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இவர்களுடைய ஆலோசனை மூலம் எல்லை பதற்றத்தை தணிக்க புதிய முன்னெடுப்புகள் உருவாகுமா என இரண்டு தரப்பிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதலில் பல சீனப் பொறியாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்தும் இரண்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via