வாகன தயாரிப்பில் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் ஸ்டாலின்

by Staff / 11-05-2023 04:13:15pm
வாகன தயாரிப்பில் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் ஸ்டாலின்

வாகன தயாரிப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் தொழில் முதலீட்டு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 'மின்வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான செயல்பாடே முக்கிய காரணம். மின் ஊர்தி வாகன உற்பத்தியிலும் தமிழ்நாட்டை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொழில் துறை நிகழ்ச்சியில்தான் நான் அதிகமாக கலந்து கொண்டுள்ளேன். புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள டி.ஆர்.பி ராஜா சிறப்பாக செயல்பட்டு அதிக அளவில் முதலீட்டை ஈர்ப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்' என கூறினார்.

 

 

Tags :

Share via