ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் - முதல்வர் ஸ்டாலின்

by Staff / 18-05-2023 01:59:37pm
ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் - முதல்வர் ஸ்டாலின்

தமிழர்களின் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள், இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது " தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo