பாஜக மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

by Editor / 20-05-2023 09:43:45pm
 பாஜக மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகக்கோரி பாஜக மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 23 பேர் கள்ளச்சாராயம் குடித்து அண்மையில் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில்  இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேரூந்துநிலையத்தின் முன்பு  மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தலைமையில் பாஜகவினர் மற்றும் பாஜக மகளிர் அணியினர் நூறுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் வளர்மதி,மகளிர்  அணி மாவட்ட பொருளாளர் மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொழில் பிரிவு மாநிலச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மகளிர் அணியினர் கடந்த அதிமுக ஆட்சியின் போது மதுக்கடையை மூட வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின்  கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படத்தை பதாகைகளில் ஏந்தி  இருந்தனர்.மேலும் கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர்  பதவி விலக வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.

 

Tags :

Share via