ராணுவத்திற்கு எதிரான புரட்சியில் வென்றார்   நேற்று...ராணுவத்தின் கட்டுப்பாட்டில்   இன்று..

by Admin / 09-12-2021 11:46:46pm
ராணுவத்திற்கு எதிரான புரட்சியில் வென்றார்   நேற்று...ராணுவத்தின் கட்டுப்பாட்டில்   இன்று..

ராணுவத்திற்கு எதிரான புரட்சியில் வென்றார்   நேற்று...ராணுவத்தின் கட்டுப்பாட்டில்   இன்று..

ராணுவத்திற்கு எதிராக ,ஜனநாயகத்தை  தோற்று விக்க  மக்களை ஒருங்கு திரட்டி போராடியதன்  விளைவாக
ராணுவத்தினரால் 21ஆண்டுகள் வீட்டுச் சிறைக்குள் இருந்தார்,மியான்மரின் தலைவர் ஆங் சாங் சூகி.உலக நாடுகள் ஒரே குரலில் அவரை விடுவிக்க வலியுறுத்தியதால்,வேறு வழியின்றி விடுதலை செய்யப்பட்டார்.மக்கள் செல்வாக்கின் காரணமான இவரது தேசிய லீக்கட்சி 2015ஆம் ஆண்டு 80 விழுக்காடு இடங்களைக்கைப்பற்றி ஆட்சியை அமைக்க முயன்றது.ஆனால்,அவரது மகன்கள் வெளிநாட்டுக்குடியுரிமை பெற்றவர்கள் என்பதால்,அவரால் ஆட்சி பொறுப்பை


ஏறக்க முடியாது போகவே  ஆங்சாங் சூகியின் டிரைவர் டின் கியாவ் அதிபராக பதவிஏற்றார்.ஆங்சாங்சூகி நாட்டின் தலைமை ஆலோசகரானார்.
  இந்நிலையில்,மக்களின் ஏகோபித்த செல்வாக்கப் பெற்ற ஆங்சாங் சூகிக்கு  தலைவலி இனப்பிரச்சனை வடிவத்தில் வந்தது.ரோஹிங்கியா முஸிலீம்கள் மீது ராணுவத்தை ஏவி இனப்படுசகாலைக்கு  காரணமானார்  என்று குற்றம் சாட்டப்பட்டு,ஐ.நா.மனித உரிமைகள்  முன் விசாரணைக்கும் ஆஜரானார்.


கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஜனநாயகத்துக்கான தேசீய லீக்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சிஅமைத்தது.தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகச்சொல்லி ராணுவம் மீண்டும ஆட்சியைக்கைப்பற்றி


மூத்த தலைவர்கள் பலரையும் கைது செய்து வீட்டுச்சிறையில் வைத்துள்ளது. இதற்கு ப்பொது மக்களிடமிருந்து
கடும் எதிர்ப்பு உருவானது .ஆனால் ,ராணுவம் தம் அதிகாரத்தை கொண்டு அடக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள்
சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஆங்சாங்சூகி மீது ராணுவ நீதிமன்றம் தகவல் தொழில் நுட்ப  கருவி சட்ட விரோதமாக பதுக்கி வைத்தது,மக்களைப் போராடத்ததூண்டியது எனக்குற்றம்சாட்டி  வீட்டுக்காவலில் வைத்துள்ள ராணுவம்  நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் பல வழக்குகள் இவர் மீதிருப்பதால்,பல ஆண்டுகள் சிறை
வாசம் இருக்க வேண்டி வரலாம்.ஆங சாங் சூகியின் தந்தை முக்கிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via