கோவை மாவட்டத்தில் 12-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்.

by Editor / 18-12-2021 02:31:41pm
கோவை மாவட்டத்தில் 12-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்.

நீலகிரி மாவட்ட கொலக்கம்பை இன்ஸ்பெக்டர் யசோதா தேவி கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இடம் மாற்றப்பட்டார். மேட்டூர் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி கோவை ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டராகவும், இங்கு பணிபுரிந்த பிரபுதாஸ் கடைவீதி இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் போத்தனூர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், இங்கு பணிபுரிந்த ஆனந்த் சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இங்கு பணிபுரிந்த ரேணுகாதேவி கோவை கோவை மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் இரும்பாலை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் கோவை செல்வபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புறநகர் பகுதி இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் குனியமுத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகவும், இங்கு பணிபுரிந்த வேல்முருகன் கோவை கிழக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி இன்ஸ்பெக்டர் சசிகலா வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் நகர இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி குனியமுத்தூர் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர்  பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via