கேரளாவில் கல்லூரி மாணவிகள் உள்பட 63 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

by Admin / 19-01-2022 03:53:14pm
கேரளாவில் கல்லூரி மாணவிகள் உள்பட 63 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

கேரள தலைமை செயலகத்திலும் ஊழியர்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முதல் மந்திரி அலுவலகம் மூடப்பட்டது. இதுபோல கல்வி மந்திரி சிவன்குட்டிக்கும் பாதிப்பு உறுதி ஆனதால் அவரது அலுவலகமும் மூடப்பட்டது.
 
மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 28 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபோல கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களுக்கு கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி ஆகி உள்ளது.

இதில் வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த 4 பேர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று திரும்பிய தனியார் கல்லூரி மாணவிகள் 6 பேரும் அடங்குவர்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வர மாநில சுகாதார துறை திட்டமிட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் மற்றும் இறப்பு சடங்குகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, மாநிலம் முழுவதும் மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். லேசான அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via