மோடிக்கு மணிப்பூர் செல்ல இதுவரை நேரமில்லை - கார்கே

by Staff / 05-02-2024 05:07:33pm
மோடிக்கு மணிப்பூர் செல்ல இதுவரை நேரமில்லை - கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது X பதிவில், மணிப்பூரில் 9 மாதங்களை கடந்து தொடர்ந்த வன்முறை ஏராளமான உயிர்களை சிதைத்துள்ளது. ஆனால் இதுவரை மணிப்பூரில் நேரில் சென்று பார்வையிட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரமில்லை. அவர் கடைசியாக மணிப்பூருக்கு தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்றுள்ளார். இதுவரை மணிப்பூரில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 50,000 பேர் இன்னும் நிவாரண முகாம்களில் உள்ளனர் என்று கவலை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via