திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் நீக்கம்.

by Staff / 21-05-2023 04:32:07pm
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் நீக்கம்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக திமுக செயலாளராக பணியாற்றி வரும் அப்துல் வகாப் என்பவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன் கான் திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட மாநகர நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். அப்துல் வகாப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக தலைமைக்கு சென்றதின் தொடர்ச்சியாக இது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு எதிரணியினர் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via