கனடாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு

by Admin / 14-11-2021 09:58:53pm
கனடாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு

 

குளிர்ச்சியான பருவநிலை, கட்டுப்பாடுகள் தளர்வு ஆகியவற்றால்தான் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கனடா நாட்டின் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுமார் 3.81 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடான கனடாவில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

சராசரியாக ஒரு நாளில் 2,500 பேருக்கு தொற்று பாதித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 1,800 பேர் சிகிக்சையில் சேருகிற நிலை உள்ளது. அங்கு 528 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

நேற்று முன்தினம் 3,164 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்து 45 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 29 ஆயிரத்து 130 பேர் இறந்து இருக்கிறார்கள்.

 

Tags :

Share via