கர்நாடக வெற்றி: தேர்தலுக்கு மீண்டும் தயாராகும் காங்கிரஸ்

by Staff / 22-05-2023 12:37:58pm
கர்நாடக வெற்றி: தேர்தலுக்கு மீண்டும்  தயாராகும் காங்கிரஸ்

கர்நாடகாவில் கிடைத்த அமோக வெற்றிக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையின் கவனம் எதிர்வரும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களை நோக்கி திரும்பியுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநிலங்களில் தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் காங்கிரஸ், மே 24ஆம் தேதி அந்தந்த மாநில தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது. மேலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் வகையில், தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

 

 

Tags :

Share via