அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 11 பேரும் மீது பத்தாயிரம் பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தருமபுரி நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல்.

by Staff / 22-05-2023 02:00:42pm
அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 11 பேரும் மீது பத்தாயிரம் பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தருமபுரி நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல்.

கடந்த 2016 முதல் 21 வரை அதிமுக ஆட்சியும் அப்போதும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே பி அன்பழகன் தனது ஆட்சி காலத்தில், மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் ஆகியோரது பெயரில் சுமார் 11 கோடியே 32 லட்சம் அளவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து கே‌.பி.அன்பழகன், கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி, காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் உள்ள கே.பி.அன்பழகன் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டது‌.
இதனைத் தொடர்ந்து கே.பி.அன்பழகன் உறவினர்களான சரவணன், சரவணகுமார், மல்லிகா, தனபால், மாணிக்கம் ஆகியோர் உடந்தையுடன் அவரது பெயரிலும், அவரது குடும்பத்தினர் பெயரிலும் நிலங்கள், தொழில் முதலீடு, வங்கி இருப்புகள், இயந்திர தளவாடங்கள், ஆபரணங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை, முறையீடாக பெற்ற பணத்தையும், அவருக்கு சொந்தமான பச்சையப்பன் சரஸ்வதி பச்சைப்பன் அறக்கட்டளைக்கு அனுப்பியதன் வழியாக என மொத்தம் ரூ.45,20, 53,363 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இந்த வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அனுமதி பெற்று, இன்று காலை தருமபுரி சிறப்பு நீதிபதி, மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதில் 1.கே.பி.அன்பழகன் 2. மனைவி மல்லிகா 3. மகன் சசிமோகன் 4. சந்திரமோகன் 5. மருமகன் ரவிசங்கர் 6.அக்கா மகன் சரவணன் 7.அக்கா மகன் சரவணக்குமார் 8. காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மாணிக்கம் 9. பள்ளி நிர்வாகி தனபால், சரஸ்வதி பச்சைப்பன் அறக்கட்டளை உள்ளிட்ட பதினோறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் குற்றப் பத்திரிக்கை சுமார் 10,000 பக்கங்கள் அளவில் நீதிமன்றத்தில், நீதியரசர் சுரேஷிடம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சோதனை நடத்த தினமே பணம் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், முதன்முறையாக இன்று கே.பி அன்பழகன் மற்றும் சி.விஜயபாஸ்கர் இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via