திண்டுக்கல் லியோனிக்கு அபராதம் விதிப்பு

by Staff / 23-05-2023 12:37:51pm
திண்டுக்கல் லியோனிக்கு அபராதம் விதிப்பு

திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகவும் பதவி வகித்து வருபவர் திண்டுக்கல் ஐ.லியோனி. இவருக்கு தமிழ்நாடு அரசு இலச்சினை பொருத்திய கார் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விதிமுறையை மீறும் வகையில் காரில் பம்பர் மற்றும் கண்ணாடிக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக புகார் எழுந்த நிலையில், ஆலந்தூர் பகுதி போக்குவரத்து போலீசார் ரூ.2500 அபராதம் விதித்தனர். ஆளும் கட்சி பிரமுகர் என்பதையும் பொருட்படுத்தாமல் போலீசார் கடமையை சரியாக செய்துள்ளனர். பட்டிமன்ற பேச்சாளராகவும், திரைப்பட நடிகராகவும் வலம் வரும் லியோனி, அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

 

Tags :

Share via