இருமல் மருந்து ஏற்றுமதியில் புதிய விதிமுறைகள்

by Staff / 23-05-2023 03:59:17pm
இருமல் மருந்து ஏற்றுமதியில் புதிய விதிமுறைகள்

இருமல் மருந்து ஏற்றுமதிக்கான முக்கிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஆய்வகங்களில் இருமல் சிரப் கட்டாயமாக்கப்பட்டது. அரசு ஆய்வகங்களில் ஆய்வு செய்த பிறகே ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்கள் இருமல் மருந்துகளை பரிசோதித்த பிறகு, சான்றிதழை வழங்க வேண்டும். இந்த விதிமுறைகள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்திய குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

 

Tags :

Share via