கண்ணீர் வர வைத்த சிறுமி டானியா, முதல்வருக்கு நன்றி தெரிவித்த வீடியோ

by Staff / 23-05-2023 05:11:50pm
கண்ணீர் வர வைத்த  சிறுமி டானியா, முதல்வருக்கு நன்றி தெரிவித்த வீடியோ

சென்னை ஆவடியைச் சேர்ந்த சிறுமி டானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் உதவிக்கரம் நீட்டியதால் தற்போது குணமடைந்துள்ளார். இந்நிலையில், சிறுமி டானியாவின் படிப்புக்கான செலவை மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனம் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து, இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சிறுமி டானியா, முதல்வருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் இரு கன்னங்களுடனும் பிறந்த நாள் கொண்டாடுவதாக கூறினார். மேலும், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

 

 

Tags :

Share via

More stories

Logo